8 
மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த பைக்கின் மீது மோதிய கார்.. இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதின் CCTV காட்சி வெளியீடு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் சாலையோரத்தில் கட்டுப்பாட்டை இழந்து விழுந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதின் CCTV காட்சி வெளியாகியுள்ளது.

Srini Vasan

சேரன்மகாதேவியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பைக் மீது மோதும்
கார் - சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் கடந்த சில ஆண்டுகளாக புதிதாக நெடுஞ்சாலை
அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேரன்மகாதேவி யூனியன்
அலுவலகம் அருகே கடந்த சில ஆண்டுகளாக சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனால் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

மேலும் இவ்வழியாக செல்லும் வாகனங்களால் ரோடுகளில் புழுதி பறந்து வாகன
ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது சில விபத்துகளும்
அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில் சேரன்மகாதேவி யூனியன் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற
நபர் ஒருவர் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையால் திடீரென இருசக்கர
வாகனம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த
கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இருப்பினும் கார் டிரைவர் சுதாரித்து கொண்டு உடனடியாக பிரேக் பிடித்ததால்
அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது..

மேலும் இப்பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடைபெற்று வருவதால் சாலையை
விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும் மேலும் சாலை பணி முடியும் வரை சாலையின்
இருபுறமும் தடுப்புகள் வைத்து வாகனங்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்
கோரிக்கையும் வைத்துள்ளனர்