8 
மாவட்ட செய்திகள்

பட்டிபுலம் கடற்கரையில் ஒதுங்கிய கல்லூரி மாணவர்களின் உடல்.. கடலில் குளிக்க சென்ற மாணவர்கள் அலையில் சிக்கி பலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடலில் குளிக்க சென்றபோது மாயமாகிய இரண்டு கல்லூரி மாணவர்களின் உடல்களும் கரை ஒதுங்கியது .

Srini Vasan

மாமல்லபுரத்தில் மேலும் 2 கல்லூரி மாணவர்கள் உடல் இன்று கரை ஒதுங்கியது!

சென்னை அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 17 பேர் 9 இறுசக்கர வாகனங்களில் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் 'கட்' அடித்துவிட்டு மாமல்லபுரத்திற்கு ஒரு குழுவாக சுற்றுலா வந்தனர். அவர்கள் அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு இறுதியாக மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலுக்கு அருகில் உள்ள கடலில் தங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் 3 மாணவர்கள் நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டு உயிருக்கு போராடினர். இதில் ரோஷன் என்ற மாணவர் உடல் நேற்று கரை ஒதுங்கியது. இந்நிலையில் ஆழ் கடலுக்கு அடித்து செல்லப்பட்டு மாயமான மாணவர்கள் பிரகாஷ், கவுதம் ஆகிய இருவரின் உடலை காலவாக்கம் தீயணைப்பு துறையினரும், மாமல்லபுரம் போலீசாரும் இணைந்து நேற்று இரவு வரை தேடினர். உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் கடற்ரையில் பிரகாஷ், கவுதம் ஆகிய இருவரின் உடல்களும் கரை ஒதுங்கியது. இருவரின் உடல்களையும் மாமல்லபுரம் போலீசார் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.