6 
மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் சேதமடைந்த ஷட்டர் மாற்றம்.. சேதமடைந்த ஷட்டர் மாற்றப்பட்டு புதிய ஷட்டர் பொருத்தப்பட்டது

தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில், சேதமடைந்த ஷட்டர் மாற்றப்பட்டு புதிய ஷட்டர் பொருத்தப்பட்டது.

Srini Vasan

தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் சேதமடைந்த ஷட்டரை புதிதாக பொருத்தப்பட்டது.

தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. இந்த தாமிரபரணி நதி மூலம் திருநெல்வேலி,
தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி என 4 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக
விளங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விவசாயத்திற்கும், தூத்துக்குடியில் உள்ள
தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்கி வருகிறது.
இந்த தாமிரபரணி ஆற்றில் 8 தடுப்பணைகள் உள்ளது. இதன் 80 ஆயிரம் ஏக்கர் விவசாய
நிலங்கள் பாசதி வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையாக விளங்குகிறது
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட
அணைக்கட்டு. சுமார் 150 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக உள்ளது. மேலும் இந்த
அணைக்கட்டு மூலம் வடகால் மற்றும் தென்கால் மூலம் விவசாயத்திற்கு பாசன வசதி
வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில்
ஷட்டர்கள் அனைத்தும் பழுது நீக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள ஷட்டரில் பழுது ஏற்பட்டுள்ளது.
இரண்டு ஷட்டர்களில் துளை விழுந்துள்ளது. இதனால் வினாடிக்கு பல ஆயிரம் கன அடி
நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் சேதமடைந்த ஷட்டரை புதுப்பிப்பதற்காக
பணியாளர்கள் வருகை தந்தனர். நேற்று மாலை முதல் பணிகளை தொடங்கினர். நேற்று இரவு
முதல் பணிகளை செய்து அதிகமாக சேதமடைந்த ஷட்டர் முழுமையாக அகற்றப்பட்டு புதிய
ஷட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அணைக்கட்டு மேல் உள்ள பாலத்தின் கைப்பிடி சுவர்களை சீரமைக்கும்
பணிகளும் தொடங்கி உள்ளது.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.