16 
HOME

சிவில் வழக்குகளில் காவல்துறை கட்டப்பஞ்சாயத்துக்கு செய்கின்றனர்”.. காவல்துறை கட்டப்பஞ்சாயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சிவில் வழக்குகளில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் காவலர்களை கண்டித்து போராட்டம் நடத்த திராவிடர் விடுதலை கழகத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Srini Vasan

சிவில் வழக்குகளில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் காவலர்களை கண்டித்து போராட்டம் நடத்த திராவிடர் விடுதலை கழகத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி மேட்டூர் காவல்நிலைய போலீசார், சிவில் வழக்குகளில் தலையிடுவது, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை கண்டித்து போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், திராவிடர் விடுதலை கழகத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். பொது மக்களுக்கு பாதிப்புகள் இல்லாமல், ஜனநாயக ரீதியில் போராட்டம் நடைபெறும் என மனு தாரர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.