அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி, 89 கோடியே 19 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.