49 
HOME

ரயில்வே வாரியத்தின் அடுத்த தலைவர் சதீஷ்குமார்.. முதன்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமனம்

ரயில்வே வாரியத்தின் தலைவராக முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Srini Vasan

ரயில்வே வாரியத்தின் தலைவராக முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். வாரியத்தின் தலைவராக உள்ள ஜெய வர்மசின்ஹா வரும் 31-ம் தேதியுடன் பணிநிறைவு பெறவுள்ள நிலையில், இந்திய ரயில்வே மேலாண்மை சேவை பிரிவில் பணியாற்றி வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டார்.