திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் 90 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளதால், சென்னை மக்களுக்கான குடிநீர் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீன்பிடிக்க முடியாமல் வறுமையில் வாடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.