ஆவணிமாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு
தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி
சுந்தரமகாலிங்கம் கோவில் . இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500
அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் ,அமாவாசை
,பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது
வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அம்மாவாசையை முன்னிட்டு இன்று 31ஆம்
தேதி முதல் 03 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய
வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் இன்று ஆவணி மாதபிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு
பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலில் குவிந்து
மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .
இன்று சனி பிரதோஷம் நாள் என்பதால் கூட்டம் என்பது சற்று அதிகமாகவே
காணப்படுகிறது.
மேலும் பக்தர்கள் காலை 07 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி
தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள்
மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை
விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர
மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.
\மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை
விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது
நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோவிலுக்கு செல்ல
பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில்
நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.