கோவையில் நடைபெற்ற புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் சுனில் நரேன் ஸ்டைலில் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீசிய வீடியோ வெளியாகியுள்ளது. புச்சிபாபு கிரிக்கெட் தொடர் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 12 அணிகள் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.