8
HOME
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இருவர் நீக்கம்.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளரான எம்.கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அரசூர் சிவா என்கிற சிவக்குமார் ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
